Skip to main content

உலகமே கொரோனாவால் முடங்கிய வேளையில் பிரேசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது....!

May 23, 2020 282 views Posted By : YarlSri TV
Image

உலகமே கொரோனாவால் முடங்கிய வேளையில் பிரேசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது....! 

உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது.



கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்தாகின. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் இருந்து மீள போராடி வருகின்றன.



இந்த பதட்டம் எதுவும் இல்லாமல் ஐரோப்பிய நாடான பெலராசில் வழக்கம் போல பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. தற்போது நடக்கும் ஒரே கால்பந்து தொடர் என்பதால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



கொரோனா இல்லையா



95 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெலாரசில், கொரோனாவினால் 4200 பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் பலியாகினர். இருப்பினும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



கடந்த வாரம் மின்ஸ்க், டைனமோ மின்ஸ்க் அணிகள் மோதிய போட்டியை காண 3000 ரசிகர்கள் திரண்டனர். தற்போது ரசிகர்கள் வருகை குறைந்து விட்டன.



தவிர வீரர்களும் கொரோனா பயத்தை வெளிப்படுத்தினாலும், தொடர் நடத்துபவர்கள் வருமானம் தான் முக்கியம் என்பதால் கண்டு கொள்ளவில்லை.



ஆன் லைன் ரசிகர்கள்



பெலாரஸ் கால்பந்து போட்டிக்கு நேரில் வராத ரசிகர்கள் 'ஆன் லைனில்' டிக்கெட் வாங்கலாம். இவர்களது முகத்தை, காலரியில் இருக்கும் 'கட் அவுட்டில்' ஒட்டி விடுவர். ரசிகர்கள் வீடுகளில் இருந்து போட்டி மற்றும் தங்கள் போட்டோவையும் பார்த்து ரசிக்கலாம்.



பெண்கள் பாவம்



பெலராஸ் பெண்கள் கால்பந்து தொடர் நேற்று துவங்க இருந்தது. ஆனால் வீராங்கனைகளில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதனால் இத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை