அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது
May 23, 2020 330 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது
கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 96 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார். முன்னதாக அவர் தன் முக கவசத்தை அகற்றினார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இதைப் பார்க்கும் மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுக்கு நான் தர விரும்பவில்லை” என்று கூறினார்.
ஆனால் சுகாதார வழிகாட்டும் விதிமுறைகளுக்கு இணங்குமாறு டிரம்பை மிச்சிகன் மாகாண அட்டார்னி ஜெனரல் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை டிரம்ப் ஏற்கவில்லை. “கொரோனா வைரஸ் சோதனையை வழக்கமாக செய்து கொண்டு வருவதால் இது தேவையில்லை” என்று அவர் கூறிவிட்டார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.
நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல. ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறினார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago