Skip to main content

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியது....!

May 22, 2020 283 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியது....! 

சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதால், தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என அதிர்ச்சி தகவலை சீன மருத்துவர் தெரிவித்துள்ளார்.



சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி இதுவரை பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.



இந்த நிலையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிகொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய அறிகுறிகளை கொரோனா வைரஸ் கொண்டுள்ளதால், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



சீனாவின் ஜுலின், ஹீலோங்ஜியாங் ஆகிய மாகாணங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொண்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணைய நிபுணர் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



வுஹானில் தோன்றிய முதல் கொரோனா பாதிப்பை ஒப்பிடும்போது ஜூலி, ஹீலோன்ங்ஜியாங் மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளிடையே வித்தியாசமாக வெளிப்படுவதாக சீனா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து சீனாவின் உயர்மட்ட மருத்துவ பராமரிப்பு மருத்துவர்களில் ஒருவரான கியூ ஹைபோ அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். அதில், வுஹானை ஒப்பிடும்போது சீனாவின் வடகிழக்கு பகுதியில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய அதிக நேரம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.



இதனால் கொரோனா பாதிப்பை முன்பே கண்டறிவதில் அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்



 

Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை