Skip to main content

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு பரபரப்பு தகவல்

May 22, 2020 278 views Posted By : YarlSri TV
Image

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு பரபரப்பு தகவல் 

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது.



அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது என இந்தியா 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.இந்த ஒப்பந்தம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலானது.



ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்குவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. தங்களிடம் இருந்துதான் இத்தகைய தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்கா எண்ணுகிறது. எனவே, ரஷியாவிடம் இருந்து நீங்கள் ஏவுகணை வாங்கினால், பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. ஆனாலும் இந்தியா அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.



இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷியாவுக்கு இந்தியா முதல் கட்டமாக 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) தொகையை கடந்த ஆண்டு வழங்கியது. இது அமெரிக்காவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்தியாவின் செயல் குறித்து அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள்) கூறியதாவது:-



அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டப்படி (கேட்சா) ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.



ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.



இந்தியா அதிநவீன நிலை மற்றும் மிக உயர்ந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற நகர்கிறபோது, உண்மையில் அவர்கள் எந்த அமைப்பினுள் செயல்பட விரும்புகிறார்கள் என்பது கேள்வியாக மாறும்.



ஒரு கட்டத்தில் இந்தியா, தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களுக்கு ராணுவ ரீதியிலான உறுதிப்பாட்டை செய்ய வேண்டும். எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன.



ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகம் இப்போது 20 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1½ லட்சம் கோடி) தற்போது தாண்டி இருக்கிறது.



இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறோம். அதற்கான பெருமை, தற்போதைய நிர்வாகத்துக்கு உண்டு. அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும்.



21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி சாதனங்கள் போன்றவற்றால் ஏற்படுகிற அச்சுறுத்தல்களை சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை