Skip to main content

கொரோனா பாதிப்பில் ரஷியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

May 21, 2020 290 views Posted By : YarlSri TV
Image

கொரோனா பாதிப்பில் ரஷியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  

ரஷியாவில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது.அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.



 



இவர்களில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2 ஆயிரத்து 699 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 29-ந் தேதிக்கு பிறகு, பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.



இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.



 



ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.



 



அதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.



 



கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம்பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை