Skip to main content

ஜூவல்லரி டிசைனராக விரும்பிய தமன்னா

May 21, 2020 326 views Posted By : YarlSri TV
Image

ஜூவல்லரி டிசைனராக விரும்பிய தமன்னா 

தமன்னாவை பார்த்தால் 30 வயது என்றே கூற முடியாது. அந்த அளவுக்கு இளமையாகத் தெரிகிறார். தமன்னாவுக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லையாம். அவரின் அப்பா ஒரு வைர வியாபாரி. அதனால் தமன்னாவுக்கு சிறு வயதில் இருந்தே நகைகள் மீது ஈடுபாடு அதிகம்.அப்பாவுக்கு உதவியாக நகைகள் டிசைன் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் தமன்னா. ஆனால் அவரை தேடி பட வாய்ப்புகள் வர சரி, ட்ரை பண்ணுவோம் என்று நடிக்க அதுவே அவருக்கு முழு நேர வேலையாகிவிட்டது.



ஜூவல்லரி டிசைனராக விரும்பிய தமன்னா தற்போது நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார். படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக இருந்த தமன்னா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.



லாக்டவுனால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பொழுதை போக்குவது போன்று தமன்னாவும் செய்கிறார். தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ஆக்ஷன். சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் தமன்னா ராணுவ அதிகாரியாக மிரட்டியிருந்தார்


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை