Skip to main content

ஆறு மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரை எடுக்கபோகிறது கொரோனா....!

May 15, 2020 314 views Posted By : YarlSri TV
Image

ஆறு மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரை எடுக்கபோகிறது கொரோனா....! 

அடுத்த 6 மாதங்களில் சர்வதேச ரீதியாக 12 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என்று ஐ.நா.வின் சிறுவர் நல அமைப்பான யுனிசெப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.



கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த பாரியளவிலான உயிரிழப்பு ஏற்படுமெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளி அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



பல நாடுகளில் பாடசாலைகள் மூலமாகத் தான் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் முறையாக உணவின்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்.அடுத்த 6 மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பிரேசில்,பாகிஸ்தான், நைஜீரியா, மாலி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் உயிரிழப்பு அதிகளவில் இருக்கும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக் காட்டியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை