Skip to main content

எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது!

May 11, 2020 321 views Posted By : YarlSri TV
Image

எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது! 

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த 7 மனுக்களை எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



இந்த மனுக்கள் இன்று நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.



இதன்போது மனுக்களில், இடைமனுதாரர்களாக இணைவதற்கு அனுமதியளிக்குமாறு கோரி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.



இந்த வழக்கில் இடைமனுதாரர்களாக இணைவதற்கு எதிர்பார்த்துள்ள ஏனையவர்கள் விண்ணப்பிப்பதற்காக நாளை (12) மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்க நீதியரசர்கள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.



அத்துடன் இந்த மனுக்களை அவசர விடயமாக கருதி பரிசீலிப்பதற்கு தினமொன்றை அறிவிக்குமாறும் அவ்வாறு பரிசீலிப்பதற்கான தினத்தை அறிவிக்கும் வரை தேர்தல் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை எடுக்காமலிருப்பதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரரான சரித்த குணரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



எவ்வாறாயினும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பினரது வாதங்களையும் கேட்டறிந்ததன் பின்னர் அது தொடர்பிலான உத்தரவொன்றை பிறப்பிக்க முடியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை