Skip to main content

யார், எந்த அணிக்கு சென்றிருப்பர் என்பது குறித்து ஒரு பார்வை!

Apr 18, 2020 1425 views Posted By : YarlSri TV
Image

யார், எந்த அணிக்கு சென்றிருப்பர் என்பது குறித்து ஒரு பார்வை! 

கடந்த 1980-90 களில் ஐ.பி.எல்., தொடருக்கான ஏலம் நடந்திருந்தால், கபில் தேவ், ஸ்ரீகாந்த், காம்ப்ளி உள்ளிட்டோரை வாங்க கடும் போட்டி காணப்பட்டு இருக்கும்.



ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் கொரோனா காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே கடந்த 1980-90களில் ஐ.பி.எல்., தொடர் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என சிறிய கற்பனை செய்து பார்க்கப்பட்டது.



அப்போதைய முன்னணி வீரர்களை ஏலத்தில் வாங்க, அணி உரிமையாளர்கள் அம்பானி (மும்பை), ஷாருக்கான் (கோல்கட்டா) உள்ளிட்டோர் பெரும் தொகையை செலவு செய்திருக்கலாம்.



யார், எந்த அணிக்கு சென்றிருப்பர் என்பது குறித்து ஒரு பார்வை:



* கபில் தேவ்



இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' கபில் தேவ். பந்துகளை 'சுவிங்' செய்வதில் வல்லவரான இவர், வாயில் 'சூயிங் கம்' மென்று கொண்டே பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதில் கில்லாடி. துவக்கம், 'மிடில்' கடைசி நேரங்களில் பந்து வீசும் இவரை வாங்க அனைத்து அணிகளும் முட்டி மோதியிருக்கும்.



* ஸ்ரீகாந்த்



நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த். தனது ஆட்டத்தால் ரசிகர்களை மைதானத்துக்கு கொண்டு வருவதில் வல்லவர். 1980களில் பாட்ரிக் பாட்டர்சன், ஆன்டி ராபர்ட்சின் வேகப்பந்துகளை, 'ஹெல்மெட்' அணியாமல் சிக்சருக்கு அனுப்பியவர். சந்திக்கும் பந்துகளுக்கு சமமான ரன்களை எடுப்பார். தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை கிங்ஸ் அணிக்கு பொருத்தமாக இருந்திருப்பார்.



* காம்ப்ளி



ஐ.பி.எல்., தொடருக்கு சரியான வீரர் வினோத் காம்ப்ளி. பேட்டிங் மட்டுமல்லாமல், வைரத் தோடு, தங்க முலாம் பூசப்பட்ட 'பெல்ட்' என அப்போதே ஆடம்பரமான வீரர். இப்போதுள்ள ஹர்திக் பாண்ட்யாவை விட 10 மடங்கு மேலானவர். இவரும் சச்சினும் மும்பை அணிக்காக களமிறங்கினால் குல்தீப் யாதவ், சகாலுக்கு துாக்கமே வராது.



இதேபோல 10 முதல் 20 ஓவர்களுக்கு இடையே சிறப்பாக ரன்குவிப்பார் முகமது அசார். இவரது கேப்டன் திறமைக்காக கோல்கட்டா எப்படியும் வாங்கும். தோனியைப் போல 'பினிஷிங்' திறன் படைத்த அஜய் ஜடேஜாவுக்கு டில்லி அணி பொருத்தமாக இருக்கும்.



வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர் (ராஜஸ்தான்), 'ஆல் ரவுண்டர்' ராபின் சிங் (ஐதராபாத்), சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி சாஸ்திரி (சென்னை), மனிந்தர் சிங் (பஞ்சாப்), வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்தை (பெங்களூரு) வாங்க அந்தந்த அணிகள் கடும் சவால் தரும்.



தோனிக்கு மாற்று இல்லை



விக்கெட் கீப்பர் இடத்துக்கு தோனியைப் போல இதுவரை யாரும் பிரகாசித்தது இல்லை. ஒருநாள், 'டுவென்டி-20' அரங்கில் தனக்கென முத்திரை பதித்தவர். இவருக்கு மாற்று யாரும் இல்லை.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை