Skip to main content

மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது : மாநிலங்களுக்கு நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்குங்கள்- முதல்வர் சந்திரசேகர் ராவ் பாய்ச்சல்

May 06, 2020 423 views Posted By : YarlSri TV
Image

மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது : மாநிலங்களுக்கு நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்குங்கள்- முதல்வர் சந்திரசேகர் ராவ் பாய்ச்சல் 

 கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட நிதிச் சிக்கலில் இருந்து மாநிலங்களை மீட்கவும் மத்திய அரசு முன்வரவில்லை  நாங்களாக மீண்டுகொள்கிறோம் என்று கேட்டாலும் அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்க மறுக்கிறது. நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள் என்று தெலுங்கானா  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் காட்டமாக பேசியுள்ளார்



கொரோனா  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 3-வது கட்டமாக நீண்டுள்ளது. தொழில்கள்  வர்த்தக நிறுவனங்கள்  கடைகள்  சிறுதொழில்கள் குறுந்தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மாநில அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. ஏழைகள் கூலித்தொழிலாளிகள் வேலையின்றி தவிக்கிறார்கள்



அதன் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு மாநில அரசுகளை நடத்தும் போக்கையும்     லாக்டவுனை கையாளும் முறையையும் கடுமையாக விமர்சி்த்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது



மத்திய அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் விதம் உண்மையில் எனக்கு வேதனையாக இருக்கிறது. மாநிலங் அரசுகளை இப்படி நடத்தும் என நான் எதிர்பா்க்கவில்லை. மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது என எச்சரிக்கிறேன்.



நாட்டில் ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சிக்குறைவு  மந்தநிலை போன்ற சூழல் காணப்பட்டது  இப்போது கொரோனா பெருந்தொற்று வந்தபின் பொருளாதாரத்துக்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா  அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது



லாக்டவுனால்  தெலுங்கானா மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தில் லாக்டவுனை மே 29-ம் திகதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 



.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை