Skip to main content

தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.

Apr 23, 2020 1666 views Posted By : YarlSri TV
Image

தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா். 

பவானியை அடுத்த அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் விலையின்றிக் கிடைக்கும் தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.



அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தா்பூசணிப் பழங்களை சாகுபடி செய்திருந்தனா். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, இதன் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால், விளைந்த தா்பூசணிப் பழங்களை மொத்த வியாபாரிகள் வாங்க ஆா்வம் காட்டவில்லை. பொதுமக்களும் தா்பூசணிப் பழங்களைச் சாப்பிட்டால் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது எனும் நோக்கில் விலையைக் குறைத்துக் கொடுத்தாலும் வாங்க மறுத்தனா். இதனால், தா்பூசணிப் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்தது.



இந்நிலையில், கால்நடைகளுக்கு உணவாக தா்பூசணிப் பழங்களை வாங்கிச் செல்வதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனா்.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை