Skip to main content

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இனி நான்கு பேருக்கு மேல் இணையலாம்!

Apr 19, 2020 471 views Posted By : YarlSri TV
Image

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இனி நான்கு பேருக்கு மேல் இணையலாம்! 

வாட்ஸ்அப் நிறுவனம் இறுதியாக குரூப் கால் அழைப்பில் பங்கேற்பாளர்களின் வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக தற்பொழுது புதிய குரூப் வீடியோ கால்லிங் அழைப்பைச் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சத்தை விரைவில் வெளியிட்டு ஜூம் வீடியோ கால் பயன்பாட்டுடன் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக வாட்ஸ்அப் என்ன செய்யப்போகிறது? கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள், அலுவலக ஆலோசனை மற்றும் அலுவலகம் சார்ந்த விபரங்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இதற்காகப் பலரும் ஜூம் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.



அம்பலமானது பயனர்களின் தகவல் ஜூம் பயன்பாடு பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கவில்லை என்றும், பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் தகவல்களை ஹேக்கர்கள் அணுக வழிவகுத்துள்ளது என்றும் ஜூம் மீது குற்றச்சாற்று எழுந்தது. குறிப்பிடப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிக்கும் வகையில் சென்ற வாரம் டார்க் வெப் தளத்தில் சுமார் பல மில்லியன் ஜூம் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கே வெளியிடப்பட்டு அம்பலமானது.



நம்பிக்கை இழந்த மக்களுக்கு உதவ முன்வந்துள்ள வாட்ஸ்அப் ஜூம் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்த மக்களுக்கு வாட்ஸ்அப் கைகொடுக்க முன்வந்துள்ளது. நான்கு பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் மிகவும் தேவையான புதிய அம்சத்தைச் செயல்படுத்த வாட்ஸ்அப் தயாராக உள்ளது என்று WABetainfo தெரிவித்துள்ளது. தற்போது, ​​வாட்ஸ்அப் ஒரே நேரத்தில் நான்கு பேரை மட்டுமே குழு வீடியோ அழைப்பில் பங்கேற்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



WABetainfo வெளியிட்ட தகவல் WABetainfo இன் படி, வாட்ஸ்அப் குரூப் வீடியோ காலிங் அழைப்பில் பங்கேற்பாளர்களின் வரம்பை இறுதியாக நீட்டிக்கும். அம்சம் இன்னும் வளர்ச்சியில் இருப்பதால் புதிய குரூப் வீடியோ காலிங் அழைப்பின் வரம்பு இன்னும் சரியாக வெளியிடப்படவில்லை என்றும் அறிக்கை கூறியுள்ளது.





எந்தவித பிழையும் இல்லாமல் வெளியிட முடிவு அனைத்து பயனர்களுக்கும் குழு அழைப்பு அம்சத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு, அதில் எந்தவித பிழையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதினால் வாட்ஸ்அப் தற்பொழுது சோதனை செய்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இந்த அம்சம் பெரிதும் தேவைப்படும் என்பதினால், வெகு விரைவாக வாட்ஸ்அப் தனது சோதனையை செய்து வருகிறது.



வாட்ஸ்அப் பீட்டா iOS 2.20.50.23 வெர்ஷன் இந்த புதிய குரூப் வீடியோ காலிங் அம்சம் iOS 2.20.50.23 என்ற ஆப்பிள் போன்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் பீட்டாவில் தற்பொழுது WAbetainfon குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தைப் பெற, அதன் பயனர்கள் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பழைய வாட்ஸ்அப் மெஸ்சேஞ்சுரில் இந்த சேவை கிடைக்காது.



COVID-19 காரணமாக முழு உலகமும் ஊரடங்கின் கீழ் இருப்பதினால், வீடியோ காலிங் அழைப்பு பயன்பாடுகளுக்கு அதிக தேவை உள்ளது. இந்த நிலையில் தான் ஜூம் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது, ஆனால், பயன்பாட்டில் காணப்படும் எண்ணற்ற பாதுகாப்பின்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.



வாட்ஸ்அப் பாதுகாப்பு தன்மையை காப்பாற்றுமா? இந்திய அரசாங்கமும் ஜூம் பயன்பாட்டின் குறைபாடுள்ள பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் அதில் இருக்கும் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு எச்சரக்கைவிடுத்ததுடன், இந்த பயன்பாட்டை "பாதுகாப்பற்றது" என்று கூறி மக்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இப்பொழுது வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று தான் சொல்லவேண்டும். உண்மையில் வாட்ஸ்அப் இன் இந்த முயற்சி பாதுகாப்பு தன்மையை காப்பாற்றுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



 


Image

Image

Image

Image

Image

Image

Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை