Skip to main content

நிதி நெருக்கடி.. பெரும் அச்சத்தில் வர்த்தகர்கள்!

Apr 19, 2020 388 views Posted By : YarlSri TV
Image

நிதி நெருக்கடி.. பெரும் அச்சத்தில் வர்த்தகர்கள்! 

லாக்டவுனுக்கு பிந்தைய நிதி நெருக்கடியை நினைத்து சிறு, குறு தொழில் வர்த்தகர்களும் நடைபாதை வியாபாரிகளும் பேரச்சத்தில் உறைந்து போயுள்ளனர். லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவுக்கு வரும் என்கிற பெரும் நம்பிக்கை நாடு தழுவிய அளவில் உள்ளது. பல மாநிலங்களில் கொரோனாவால் மீண்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது.



வட இந்தியாவில் அதிக தாக்கம் ஆனால் வட இந்திய மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகியவற்றில் பெரும் கொரோனாவின் தாக்கம் இப்போதுதான் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இம்மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை உடனே திரும்பி விடுமா? என்பதும் கேள்விக்குறி.



இயல்பு நிலை எப்போது? மே 3-ந் தேதி லாக்டவுன் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலைக்கு தொழில் நிறுவனங்கள் திரும்புவதற்கு சில மாதங்களாகும். இந்த சில மாதங்களை வருவாய் இல்லாமல் எப்படி இந்த நிறுவனங்கள் இயங்க முடியும் என்பது கேள்விக்குறி. இதற்காக மத்திய அரசு உதவ முன்வந்திருப்பது ஒருவகை ஆறுதல்தான்.



கவலையில் சிறு வியாபாரிகள் அதேநேரத்தில் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் வர்த்தகம் மிகப் பெரும் கேள்விக்குறியை எதிர்கொள்கிறது. இவர்கள் புதிய முதலீட்டுக்கு கடன்களை நம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்னொரு பக்கம் விற்பனை பொருட்களை தொழில் நிறுவனங்கள் அனுப்பும் வரை காத்திருக்கவும் வேண்டும். இதனால் இவர்களுக்கு லாக்டவுன் என்பது மேலும் சில மாதங்கள் வரை நீட்டிக்கும்.



வருவாய் வழி முடக்கம் இந்த காலத்தை இவர்களால் தாக்கு பிடிக்க முடியுமா? என்பதும் மிகப் பெரும் கேள்வி. லாக்டவுன் என்பது இயல்பு வாழ்க்கையை மட்டும் முடக்கவில்லை. வருவாய் வழிகளையும் முடக்கி வைத்திருப்பதால் ஒவ்வொரு தொழிலிலும் இந்த முடக்கம் எதிரொலிக்கப் போகிறது. இதனால் உண்மையான நெருக்கடி என்பது வரும் மாதங்களில்தான் காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். 


Image

Image

Image

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை