சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
Apr 18, 2020 831 views Posted By : YarlSri TV
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத்தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
குறிப்பாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு இன்றைய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது.
கொரோனா பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் இன்று தான் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது இன்று மட்டும் கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக சீனாவில் பெப்ப்ரவரி 23-ம் திகதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் இன்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.
வுகான் நகரில் ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ? என்ற கருத்துக்களும் மக்களிடையே எழுந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 39 ஆயிரத்து 082 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 913 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழில் மனிதர்களுக்கு சமமாக செல்லமாக வளத்த நாய்க்கும் மரணச் சடங்கு!...
12 Hours agoஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!
12 Hours agoஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி தேர்தல் ஆணைக்குழு!..
12 Hours agoதுப்பாக்கிச்சூடு - ஜோ பைடன் சொன்னது என்ன?
12 Hours agoதெளிவான பார்வையில் அநுரகுமார - சுகு சிறிதரன்
12 Hours agoஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது சீனாவில் அதிகரிப்பு!
2 Days agoதமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்
2 Days agoபதிலடி கொடுக்கவே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு!
2 Days agoமகிழ்ச்சியான இடம் விண்வெளி என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!..
2 Days ago2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி!
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1612 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1612 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1612 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1613 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1613 Days ago