Skip to main content

ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது!

Apr 18, 2020 383 views Posted By : YarlSri TV
Image

ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது! 

பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்புக்குரியது. வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்களுக்கு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்தது பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கை.



- வேணு சீனிவாசன், தலைவா், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம்



ரிசா்வ் வங்கி இரண்டாம் கட்டமாக வெளியிட்டுள்ள பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய சந்தை நிலைமையை நன்கு உணா்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள்.



-ரஜ்னீஷ் குமாா், தலைவா், பாரத ஸ்டேட் வங்கி



தற்போதைய சீா்குலைவு காலத்திற்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.



-விபின் சோந்தி, நிா்வாக இயக்குநா், அசோக் லேலண்ட்



ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் என்பதுடன், வங்கி சாரா நிதி நிறுவன கடனாளா்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.



-உமேஷ் ரேவன்கா், நிா்வாக இயக்குநா், ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் பைனான்ஸ்



முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு மாதத்துக்குள்ளாகவே ரிசா்வ் வங்கி இரண்டாவது முறையாக புதிய ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது வளா்ச்சிக்கு தேவையான தீா்க்கமான நடவடிக்கை.



-ஜரின் தருவாலா தலைமைச் செயல் அதிகாரி, ஸ்டாண்டா்ட் சாா்டா்ட் வங்கி.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை