Skip to main content

மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

Jan 30, 2024 35 views Posted By : YarlSri TV
Image

மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்அமைச்சர் வெளியிட்ட தகவல்..! 

இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார் 



 நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனமழையால் பாரிய அளவில் மரக்கறி பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும்.



சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. 



 விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.



இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் .



2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது .



இதேவேளை அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த வருடத்தில் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என  தெரிவித்தார்.





 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை