Skip to main content

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

Jan 20, 2024 33 views Posted By : YarlSri TV
Image

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானம்! 

ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். 



பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் குறிப்பிட்ட சுற்றறிக்கையை வெளியிட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.



அதேவேளை, விரிவுரையாளர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கு கொடுப்பனவு வழங்கப்பவில்லை என்றால்  அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உபதலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க கூறியுள்ளார் .  



சம்பள கொடுப்பனவு

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் 

 

 கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



 ஜனவரி மாத சம்பளத்துடன் கொடுப்பனவு சேர்க்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை