Skip to main content

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் டிஜிட்டல் தேசிய அடையாள விநியோகம்!

Jan 19, 2024 45 views Posted By : YarlSri TV
Image

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் டிஜிட்டல் தேசிய அடையாள விநியோகம்!  

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.



குறித்த வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் 



வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளின் ஒரு நாள் சேவைக்காக பொதுமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.



குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை