Skip to main content

மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ! ஒரே நாளில் தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா!

Jan 17, 2024 52 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ! ஒரே நாளில் தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா! 

ஹமாஸுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதற்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் நேற்றைய தினம் அமெரிக்கா தாக்குதல்களை நடாத்தியுள்ளது .



இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது .



ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.





மீண்டும் பதிலடி கொடுத்த அமெரிக்கா  

மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றார்கள்.



இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது.





நேற்றைய  நாளில் நடாத்தப்பட  தாக்குதல்

இந்த தாக்குதலையடுத்து அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை