Skip to main content

யாழ் விஜயம் வந்தஇளவரசி : ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி!

Jan 11, 2024 30 views Posted By : YarlSri TV
Image

யாழ் விஜயம் வந்தஇளவரசி : ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி! 

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) வருகை தந்தனர்.



அந்த வகையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் வலையொளி அலைவரிசை (YouTube Channel) உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இளவரசி வருகைதரவுள்ள நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் இடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிய வருகின்றது 



ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை 

இலங்கையின் பிரபல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் அனுமதியளிக்கபடவில்லை.



குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தை ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இயங்கும் அறக்கொடை நிலையம் ஒன்றின் ஊடகப் பொறுப்பாளரே நான்கு பெயரை சிபாரிசு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசியின் வட மாகாணத்துக்கான முதல் அரச பயணமாக இந்த பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை