Skip to main content

தேர்தலில் களமிறங்க தயார்; சிறீதரன் திட்டவட்டம்!

Jan 11, 2024 35 views Posted By : YarlSri TV
Image

தேர்தலில் களமிறங்க தயார்; சிறீதரன் திட்டவட்டம்! 

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தேர்தல் இன்றி ஒருவரை ஏகனமதாக தேர்ந்தெடுக்கும் வகையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் ஒன்றின் மூலமே தலைமை தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை காணப்படுவதாக கட்சியின் தகவல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கடந்த காலங்களை போல இந்த விடயத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விட்டுக்கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனை எதிர்கொள்வதில் அவர் உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகின்றது .



தேர்தல் வாக்கெடுப்பு 

அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் தலைமைத்துவத்திற்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனை, சிவஞானம் சிறீதரன் நேரடியாக எதிர்கொள்வார் என கூறப்படுகின்றது



 எதிர்வரும் 21 ஆம் திகதி இந்த வாக்கெடுப்பு நடைபெறும் , அன்றைய தினமே வெற்றிபெற்ற வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபையிலுள்ள 400 உறுப்பினர்கள் அக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடப்படுள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

24 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

24 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

24 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

24 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

24 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

24 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை