Skip to main content

கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Jan 07, 2024 44 views Posted By : YarlSri TV
Image

கன மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! 

நாட்டின் வடக்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (07) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 



கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



அத்துடன், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மற்றைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.



மேலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எச்சரிக்கை

அத்தோடு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.



இந்நிலையில், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை