Skip to main content

கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம்! அமெரிக்காவுடனான போர் பயிற்சியால் பதற்றம்

Jan 05, 2024 35 views Posted By : YarlSri TV
Image

கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம்! அமெரிக்காவுடனான போர் பயிற்சியால் பதற்றம் 

தென் கொரியாவுக்கு சொந்தமான இரண்டு தீவுகளை நோக்கி வடகொரியா திடீரென ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு தற்போது பதற்றமான நிலை காணப்படுகின்றது 



தென்கொரியாவிற்கு சொந்தமான யோன் பியோங் தீவுக்கு அருகிலேயே 200-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா - தென் கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

அண்மையில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 

 

வட கொரியாவின் தாக்குதலில் மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தென் கொரியா தலைமைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.



வடகொரியாவின் இந்த நடவடிக்கை, கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கும் ஆத்திரமூட்டும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடகொரிய இராணுவத்தின் திடீர் தாக்குதலை அடுத்து யோன் பியோங் தீவு பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தென் கொரிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை