Skip to main content

சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? உலககோப்பை முன் ஆப்கான் தொடருக்கான அணி இன்று அறிவிப்பு!

Jan 05, 2024 43 views Posted By : YarlSri TV
Image

சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? உலககோப்பை முன் ஆப்கான் தொடருக்கான அணி இன்று அறிவிப்பு! 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 11ஆம் தேதி மொஹாயில் தொடங்குகிறது.



 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி இந்த மூன்று டி20 போட்டிகளில் தான் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில் உலகக் கோப்பை தொடருக்கு யார் யாரெல்லாம் தேர்வு ஆவார்களோ, அந்த வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



 விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கூட இந்த டி20 தொடரில் பங்கேற்பார்கள் என்ற செய்திகள் வந்துள்ளன. 





இந்த நிலையில் டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய டி20 அணியின் முக்கிய விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் காயம் காரணமாக இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை. இரண்டாவது விக்கெட் கீப்பரான இஷான் கிஷனும் மனசோர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறி தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகினார்.



இந்த நிலையில் தென்னாபிரிக்கா டி20 தொடரில் ஜித்தேஷ் சர்மாவுக்கு விக்கெட் கீப்பராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜித்தேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடக்கூடிய நடுவரிசை வீரர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. 



அதே சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அதிரடியாக விளையாடி சஞ்சு சாம்சனும் தன்னுடைய திறமையை சதம் அடித்து வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் டி20 கிரிக்கெட்டில் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



 இதனால் இஷான் கிஷன், ஜித்தேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று பெயர்களில் யார் பிளேயிங் லெவனில் அல்லது அணியில் இடம்பெறுவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



 இதைத் தவிர கே எல் ராகுல் தற்போது விக்கெட் கீப்பராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளங்குகிறார். டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுவார் என்பதால் அவரும் அணிக்குள் வந்து விட்டால் யார் தான் விக்கெட் கீப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை