Skip to main content

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு..!

Jan 05, 2024 27 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு..! 

இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது.



பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.



தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக காணப்பட்டது.



இது மொத்த சனத்தொகையில் 11.9 சதவீதம் என்பதுடன் தற்பொழுது இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களை வழங்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 25 வீதமாக உயர்வடைந்துள்ளது.



எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட சுமார் 80 பண்டங்களுக்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படுவதனால் வறிய மக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.



மெய்யான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக்கூடும் என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை