Skip to main content

மிகவும் மோசமான சாதனையை படைத்த இந்திய அணி!

Jan 04, 2024 35 views Posted By : YarlSri TV
Image

மிகவும் மோசமான சாதனையை படைத்த இந்திய அணி! 

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது .



இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், அதன் பின்னர் ஒரு ஓட்டங்களையேனும் பெறாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.



இதன் மூலம், வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் தொடர்ச்சியாக ஆறு விக்கெட்டுக்களை இழந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது 



அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் 



இந்திய அணி 153/4 என்ற நிலையில் இருந்த போது லுங்கி இங்கிடி வீசிய ஓவரில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.



தொடர்ந்து, காகிசோ ரபாடா வீசிய ஓவரில், விராட் கோஹ்லி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முஹம்மத் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.





குறித்த ஆறு விக்கெட்டுக்களும் லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா வீசிய 11 பந்துகளில் சரிந்துள்ளன.



தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.



அத்துடன், முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

19 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

19 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

19 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

19 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

19 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை