Skip to main content

ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்கள்.. எப்படி செய்தேன் தெரியுமா? சிராஜ் பேட்டி!

Jan 04, 2024 26 views Posted By : YarlSri TV
Image

ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்கள்.. எப்படி செய்தேன் தெரியுமா? சிராஜ் பேட்டி! 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ஸ்பெல்லை வீசும் போது பவுலர்களிடம் கன்சிஸ்டன்சி இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.



 இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது.



 தென்னாப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் இவ்வளவு குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட்டாகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.   அதற்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய காரணம்.



 4வது ஓவரில் தொடங்கிய வேட்டையை, முகமது சிராஜ் எங்குமே நிறுத்தவில்லை. தொடர்ச்சியாக 6 ஓவர்கள் வீசிய பின், புதிய பவுலர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேநீர் இடைவேளைக்கு பின் உடனடியாக 7வது ஓவரையும் வீச வந்தார் சிராஜ். 9 ஓவர்களை தொடர்ந்து வீசிய முகமது சிராஜ் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



 எந்த பேட்ஸ்மேன், என்ன ரன் என்று எந்த கவலையும் இன்றி ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சிராஜ் வீசி கொண்டே இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.



 இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் எப்படி ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொத்து கொத்தாக வீழ்த்தும் திறமையை கொண்டிருந்தாரோ, அதே மாதிரி முகமது சிராஜும் உருவாகி வருவதாக ரசிகர்களிடையே கருத்துகள் எழுந்துள்ளன.



 இந்த நிலையில் நீண்ட ஸ்பெல் வீசியது குறித்து முகமது சிராஜ் பேசுகையில்



, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட் தான் எப்போதும் முக்கியம்.   என்னால் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிகிறதோ, அத்தனை போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீண்ட ஸ்பெல்லை வீசும் போது லைன் மற்றும் லெந்தில் கன்சிஸ்டன்சியுடன் இருக்க வேண்டும். அதேபோல் அதில் சவால்கள் நிறைந்திருக்கும். அதுதான் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை