Skip to main content

ராஜகோபுரம் வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்..!

Jan 03, 2024 23 views Posted By : YarlSri TV
Image

ராஜகோபுரம் வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்..! 

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் புதிய வடிவமைப்பானது இந்து மதத்தின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி இந்திய மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் முனையமானது இன்றைய தினம் (02) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.



இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.



                       இந்து ஆலய வடிவமைப்பு

 

இதில், ஒரே நேரத்தில் 4,000 சர்வ தேச பயணிகள் மற்றும் 1,500 உள்நாட்டு பயணிகளின் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது.



         ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: 

         புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்



இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பாக இந்தியாவின் தமிழ் கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.



ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.





அத்துடன் உள்செல்லும் வெளியேறும் வாயில்களிலும் இந்து ஆலய கோபுர முகப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.



உள்ளே சுவரில் நடராஜர் சிற்பங்கள் , இந்து கடவுள்களின் படங்களும் வரையப்பட்டுள்ளதுடன் பிரமான்ட திரையில் ஆலய தேர் கலாசார நடனங்களும் உள்ளன.



                 அதிநவீன வசதி

இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

புதிய முனையத்தின் உள்ளே புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.



40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 பரிசோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் மேம்பாலங்கள், 3 இடங்களில் முக்கியஸ்தர்களின் காத்திருப்பு அறைகள்,1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முனையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.





 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை