Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கண்காணித்த அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ் மாற்றம்!

Jul 10, 2024 51 views Posted By : YarlSri TV
Image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கண்காணித்த அஸ்ரா கர்க் ஐ.பி.எஸ் மாற்றம்! 

தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.



தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை கண்காணித்து வந்த அஸ்ரா கர்க் உள்பட 18 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ், அமலாக்க பணியக சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி அபின்தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டுள்ளார்.



சிபிசிஐடி ஐஜியாக உள்ள அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், தெற்கு கூடுதல் காவல் ஆணையராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். 



 எச்.எம்.ஜெயராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக பணியிட மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளார்.



சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் குமார் கடலோர காவல் படை ஏடிஜிபியாகவும், ராஜீவ் குமார் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 



வினீத் தேவ் வான்கடே காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவில் இருந்து காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  



மேலும், ஐபிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராகவும், சட்டம் - ஒழுங்கு ஐஜி அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாகவும், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 



சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி, காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சிபிசிஐடி ஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிபிசிஐடி ஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழில் மனிதர்களுக்கு சமமாக செல்லமாக வளத்த நாய்க்கும் மரணச் சடங்கு!...

11 Hours ago

ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!

11 Hours ago

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி தேர்தல் ஆணைக்குழு!..

11 Hours ago

துப்பாக்கிச்சூடு - ஜோ பைடன் சொன்னது என்ன?

11 Hours ago

தெளிவான பார்வையில் அநுரகுமார - சுகு சிறிதரன்

11 Hours ago

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது சீனாவில் அதிகரிப்பு!

1 Days ago

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- யாழ். கடற்றொழிலாளர் அமைப்புக்கள்

1 Days ago

பதிலடி கொடுக்கவே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு!

1 Days ago

மகிழ்ச்சியான இடம் விண்வெளி என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!..

1 Days ago

2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி!

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை