Skip to main content

வெப்பமான காலநிலை காரணமாக இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம் .!

Feb 29, 2024 16 views Posted By : YarlSri TV
Image

வெப்பமான காலநிலை காரணமாக இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம் .! 

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 



 கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.



கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளமை  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் அதிக வெப்பம் காரணமாக மனித உடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது 



இதேவேளை, இன்றும் நாளையும் நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுருத்தல் விடுக்கப்படுள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை