Skip to main content

சீனாவில் கடும் பனிப்பொழிவு வாகனங்கள் செல்ல சிரமம்!

Feb 07, 2024 51 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் கடும் பனிப்பொழிவு வாகனங்கள் செல்ல சிரமம்! 

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால்  ஹூபே மாகாணத்தில்  நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .



 வானிலை அவதான மையம் தெரிவிக்கையில்,



மத்திய சீனாவில் இதுவரை இல்லாத அளவாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு இன்றும்(07) வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

 சுமார் 4000 வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.



இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீராகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 சீனாவில் எதிர்வரும் சனிக்கிழமை  லூனார் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது.

 மக்கள் குடும்பம் குடும்பமாக இரவு நேரங்களில் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கும் வாகனங்களில் படையெடுத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை