Skip to main content

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் :தேசிய கீதம் தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது!

Feb 04, 2024 27 views Posted By : YarlSri TV
Image

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் :தேசிய கீதம் தமிழ் மொழியிலும் இசைக்கப்பட்டது! 

இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு



ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை இன்று  (4) காலி முகத்திடலில் நடைபெற்றது.



நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியிலும்  இசைக்கப்பட்டது. 



'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.



இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொண்டுள்ளார் .



தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை மற்றும் இசைக்கப்படாமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறான விமர்சனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை