Skip to main content

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவதூறு புகார்!

Jan 31, 2024 22 views Posted By : YarlSri TV
Image

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவதூறு புகார்! 

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் இருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், பினாமி எஸ்.யூ.வி கார் மற்றும் சில குற்றம் சாட்டக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை இ.டி பறிமுதல் செய்த பின்னணியில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வந்துள்ளது.



ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் இருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், பினாமி எஸ்.யூ.வி கார் மற்றும் சில குற்றம் சாட்டக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை இ.டி பறிமுதல் செய்த பின்னணியில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வந்துள்ளது.



ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனைப் பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவரது புகழைக் குலைத்ததாக அமலாக்க இயக்குனரக (இ.டி) அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் போலீசார் புதன்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.



காவல்துறை கூறுகையில், ஹேமந்த் சோரன் தனது டெல்லி இல்லத்தில் அமலாக்க இயக்குநரகத்தின் சோதனை குறித்து காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. எஸ்சி/எஸ்டி சட்ட விதிகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், மேலும் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதுகுறித்து ராஞ்சி எஸ்.பி சந்தன் சின்ஹா கூறுகையில், “முதல்வர் ஹேமந்த் சோரன் சம்பவத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள எஸ்சி, எஸ்டி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி எனக்கு அளித்த தகவலின்படி, எந்த தகவலும் இல்லாமல் தனது டெல்லி இல்லத்திற்குச் சென்ற இ.டி அதிகாரிகள் பொய்யான செய்திகளைப் பரப்பி தனது புகழைக் குலைத்ததாக முதல்வர் தனது புகாரில் கூறியுள்ளார்.” என்று கூறினார்.



ராஞ்சி எஸ்.பி சின்ஹா மேலும் கூறுகையில், “அவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த பிறகு, ஊடகங்கள் பணப்பரிமாற்றம் மற்றும் பி.எம்.டபிள்.யூ கார் கைப்பற்றப்பட்டது குறித்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அவை தனக்கு சொந்தமானது அல்ல என்பதால் தவறான தகவல் என்றும் முதல்வர் கூறினார். இருப்பினும், எஃப்.ஐ.ஆர்-ஐப் படித்த பிறகுதான் இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியும்.” என்று கூறினார்.



ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் இருந்து 36 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு பினாமி எஸ்.யு.வி கார் மற்றும் சில குற்றம் சாட்டக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை இ.டி கைப்பற்றியதன் பின்னணியில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வந்துள்ளது.



ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை இ.டி விசாரிக்கும் நாளில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு வருகிறது. ஏஜென்சி அவரது டெல்லி இல்லத்திற்குச் சென்ற பிறகு, அவரது கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), ஹேமந்த் சோரன் தான் இருப்பதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் இ.டி-யின் நடவடிக்கை தேவையற்றது என்று கூறியுள்ளது. 



ஜனவரி 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இ.டி-க்கு ஹேமந்த் சோரன் பதிலளித்தார். ஜனவரி 31-ம் தேதி மதியம் 1 மணிக்கு அவரது இல்லத்தில் விசாரணைக்கு வருவார் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.



ஜே.எம்.எம் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “ஜனவரி 29-ம் தேதி அதிகாலையில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுடன் துப்பாக்கி ஏந்திய முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு இ.டி தன்னிச்சையாக வந்தது சட்டப்பூர்வமானதாகத் தெரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இ.டி விசாரணைக்கு இரண்டு நாட்கள் கூட காத்திருக்க முடியாதா? அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பு 7 மணிநேர விசாரணை நடந்துள்ள நிலையில் என்ன அவசரம்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



இது மாநிலத்தின் 3.5 கோடி மக்களுக்கும், முதல்வரின் மாண்புக்கும் மரியாதைக்கும் அவமானம் என்று ஜே.எம்.எம் மேலும் கூறியது. மேலும் “இ.டி போன்ற அரசியலமைப்பு நிறுவனங்கள் பா.ஜ.க-வின் கைப்பாவையாகிவிட்டதா? இந்த ஏஜென்சிகள் மூலம் இப்போது மாநிலங்களில் அரசாங்கங்கள் அமைக்கப்படுமா அல்லது விழுமா? முதல்வர்கள் நாட்டின் தலைநகருக்குச் செல்லும்போது அவர்களுக்கு ஏதாவது செய்ய மத்திய அரசு எப்போதும் முயற்சி செய்யுமா?” என்று ஜே.எம்.எம் கேள்வி எழுப்பியது.



இதனிடையே, பா.ஜ.க ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி கூறுகையில், இ.டி பயம் காரணமாக, ஹேமந்த் சோரன் டெல்லியில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமறைவாகி, 18 மணி நேரம் மறைந்திருந்தார் என்று கூறினார். மேலும், செவ்வாய்க்கிழமை ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் காணப்படுவதற்கு முன்பு, 'முதல்வர் காணவில்லை' என்ற போஸ்டரை மராண்டி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

14 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை