Skip to main content

அயோத்தி செல்ல விமான சேவை தொடக்கம்!

Jan 31, 2024 33 views Posted By : YarlSri TV
Image

அயோத்தி செல்ல விமான சேவை தொடக்கம்! 

அயோத்திக்கு செல்ல வசதியாக புதிதாக 8 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.



அயோத்திக்கு செல்ல வசதியாக புதிதாக 8 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.



வருகின்ற பிப்ரவரி 1 முதல் இயக்கப்பட உள்ளது. டெல்லியில் இருந்தும், சென்னை, அகமதாபாத், ஜெய்பூர், பாட்னா, தார்பங், மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து இயக்கப்பட உள்ளது. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்க உள்ளது.



கடந்த வாரம்தான் ராமர் கோயில் திறக்கப்பட்டாலும், அதிகபடியான பக்தர்கள் தினமும் அயோத்திக்கு வருகை தருகின்றனர். கோவில் மக்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.



அயோத்திக்கு அதிக மக்கள் வர வேண்டும் என்பதற்காக, மகாரிஷி வால்மிகி சர்வதேச விமான நிலையம் ரூ.1,462  கோடி செலவில் கட்டப்பட்டது. மேலும் தற்போது உருவாக்கப்பட்ட புதிய முனையம், அதிகபடியாக 300 பயணிகளை கையாள முடியும். மேலும் இந்த விமான நிலையம் 1 வருடத்திற்கு 10 லட்சம் வரை பயணிகளை கையாளும்  என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



மேலும் புதிய ரயில் நிலையம் அயோத்தியில் ரூ. 251 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை