Skip to main content

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் வைத்தியசாலையில்..!

Jan 31, 2024 26 views Posted By : YarlSri TV
Image

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் வைத்தியசாலையில்..! 

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



நேற்று இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது 

புத்தளம் - பாவட்டாமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஜயந்த ரோஹண என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.



 தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பு இருந்துள்ளதாகவும், அங்கு சென்ற வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். 



துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரும் குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 



நொண்டி மஹத்துன் என்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கருவலகஸ்வெவ  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை