Skip to main content

வடகிழக்கில் பாரிய போராட்டம்

Nov 03, 2023 27 views Posted By : YarlSri TV
Image

வடகிழக்கில் பாரிய போராட்டம் 

மட்டக்களப்பு மயிலத்தமடு,  மாதவனைப்பகுதிகளில் உள்ள கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையானது அம்பாறை மற்றும் பொலநறுவை பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பெரும்பான்மையின விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.



மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு  இன்றேல் வடக்கு கிழக்கில்  பாரிய  போராட்டம் நிகழும்  என ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.



அத்துடன் அங்குள்ள தமிழர்களுடைய கால்நடைகளும் பெரும்பான்மையின விவசாயிகளின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளது.



தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சியாகும்.



அதேவேளை அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புகளையும் பிரதிநிதித்துவத்தையும் இழந்துவரும் நேரத்தில் திருகோணமலையிலும் அதேநிலைமையினை எதிர்கொண்டுள்ள காலச்சூழலில் தொடர்ந்தும் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.



ஜனாதிபதி அப்பகுதியில் உள்ள சட்ட விரோத குடியேற்றகாரர்களை அகற்றுமாறு கடந்த வாரம் கூறிய பின்னரும் அப்பகுதியில் புத்தர்சிலையினை வைத்தார்கள். சட்ட விரோதமாக அம்பிட்டிய தலைமையிலான அராஜக்குழு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.



இந்நிலையில் குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக  சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாங்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய  போராட்டத்தினை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை