Skip to main content

தென் சீனக்கடலில் பதட்டம்

Oct 06, 2023 48 views Posted By : YarlSri TV
Image

தென் சீனக்கடலில் பதட்டம் 

சீன கடற்படையால் தென்சீனக்கடல் பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.



மேலும் உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்றான தென் சீனக்கடல் பகுதிக்கு சீனா, பிலிப்பைன்ஸ், தாய்வான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.



இதனால் அங்கு நீண்ட காலமாக பிராந்திய மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், சீனா தென்சீனக்கடல் பகுதியிலுள்ள ஷோல் பகுதியில் சில மிதக்கும் தடைகளை விதித்து பிலிப்பைன்ஸ் படகுகளுக்கு தடை விதித்தது.



எனினும் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் அந்த தடைகள் அகற்றப்பட்டன. மேலும் ஷோல் பகுதிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் இரு விநியோக படகுகளை கடற்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.



அதனை சீனா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது.



இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கில்பர்டோ, தென் சீனக்கடல் பகுதியில் சீனாவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க பிலிப்பைன்ஸ் தயாராகவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.   


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை