Skip to main content

இலங்கையில் சோகம்

Sep 27, 2023 27 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் சோகம் 

காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.



பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனே  உயிரிழந்துள்ளார்.



மாணவனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.



அண்ணன் திட்டியதால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.



அவரது தம்பி வீட்டில் இல்லாததால், அண்ணன் தேடிய நிலையில் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.​​



உடனடியாக பட்டபொல வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை