Skip to main content

யாழில் வாள்வெட்டு தாக்குதல்

Sep 21, 2023 36 views Posted By : YarlSri TV
Image

யாழில் வாள்வெட்டு தாக்குதல் 

யாழ்ப்பாணம்,  துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.



துன்னாலை, வேம்படி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் அபப்பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன் (வயது31), செல்வராசா (வயது50) ஆகிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இருவருக்கும் தலை மற்றும் கால் பகுதிகளில் ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை