Skip to main content

ரியூசன் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட நிலை

Sep 18, 2023 32 views Posted By : YarlSri TV
Image

ரியூசன் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட நிலை 

மத்திய மாகாணத்தில் தமது வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்திய 10 ஆசிரியர்கள் மாகாண கல்வி திணைக்களத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை மீறியதாக தெரியவருகின்றது. 



குறித்த சுற்றறிக்கையை மீறிய இந்த பத்து ஆசிரியர்கள் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 



அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் திணைக்களம் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.



இந்த ஆசிரியர்களில் பலர் இடமாற்றத்தை ஏற்காமல் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது. 



மேன்முறையீட்டு விசாரணையின் பின்னர் ஆசிரியர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் சேவையை விட்டு விலகியதாகவே கருதப்படுவார் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை