Skip to main content

தடைப்பட்ட தொழிலை செய்தால் கைது நிச்சயம்

Sep 14, 2023 30 views Posted By : YarlSri TV
Image

தடைப்பட்ட தொழிலை செய்தால் கைது நிச்சயம் 

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக  எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



 இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையில் இன்று(14)  சந்தித்தனர்.



இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.





கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவருக்கு  எதிராக மீன்பிடி திணைக்களம்,கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோரை  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை