Skip to main content

வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்வது எப்படி?

Dec 23, 2023 17 views Posted By : YarlSri TV
Image

வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்வது எப்படி? 

பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.





        *தேவையான பொருட்கள் 

தயிர் - 1 கப் 

உப்பு - தேவையான அளவு 

வெண்டைக்காய் - 3 

அரைக்கப்  தேங்காய் - கால் கப் 

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன் 

இஞ்சி - 1/2 துண்டு 

பூண்டு - 3 

காய்ந்த மிளகாய் - 4 

பெருங்காயத்தூள் -1 சிட்டிகை

          *தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன் 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிதளவு 

காய்ந்த மிளகாய் - 1



செய்முறை : 



வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்..பின் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.



பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள். பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம். அவ்வளவுதான் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை