Skip to main content

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்வீட் எடு கொண்டாடு.

Dec 23, 2023 21 views Posted By : YarlSri TV
Image

கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்வீட் எடு கொண்டாடு. 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் நிலையில்  இக் கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த பகுதி சுவையான உணவாகும்.. 

     

*ஆல்மண்ட் பனானா கேக்செய்யும் முறை.

          

                  *தேவையான பொருட்கள்.



1/2 கப் - உப்பு சேர்க்காத வெண்ணெய்



1/2 கப் - தூளாக்கப்பட்ட வெல்லம்



1 1/2 டி.ஸ்பூன் - இலவங்கப்பட்டை தூள்



1/4 டி.ஸ்பூன் - ஜாதிக்காய் தூள்



1/2 கப் - நறுக்கிய பாதாம்



3/4 கப் - சர்க்கரை



3 - முட்டை



2 டி.ஸ்பூன் - ஆரஞ்சு ஜெஸ்ட்



1 1/4 கப் - பிசைந்த வாழைப்பழம்



3 கப் - ஆல் பர்பஸ் மாவு



1 1/2 டி.ஸ்பூன் - பேக்கிங் பவுடர்



1 டி.ஸ்பூன் - சமையல் சோடா



1/2 டி.ஸ்பூன் - உப்பு



2/3 கப் - மோர்



செய்முறை விளக்கம்.



1/4 கப் வெண்ணெயை உருக்கி, இரண்டு தேக்கரண்டியை வாணலியில் ஊற்றவும். வாணலியின் இரு சைடுகளிலும், கீழும் வெண்ணெய்யை நன்கு தடவவும். வெல்லம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், பாதாம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பாதி வெல்ல கலவையை வாணலியின் கீழே சேர்க்கவும். மீதமுள்ள கலவையை மீதமுள்ள உருகிய வெண்ணெயுடன் சேர்த்து தனியே வைக்கவும்.



ஒரு பெரிய கிண்ணத்தில், மீதமுள்ள 1/4 கப் வெண்ணெய், சர்க்கரை, முட்டை, வாழைப்பழம் ஆகியவற்றை நன்கு அடித்துக் கொள்ளவும்.



ஆல் பர்பஸ் மாவு, பேக்கிங் பவுடர், சோடா மற்றும் உப்பு, மோர் ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து வாழைப்பழ கலவையுடன் சேர்க்கவும்.



இந்தக் கலவையை முன்பு தயார் செய்து வைத்திருக்கும் வாணலியில் பாதியளவு ஊற்றி, கனமான கரண்டி கொண்டு மேற்புறத்தை சமமாக பரப்பி விடவும்.



இதனை 180 ° F செட் செய்து ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் பிளேட்டுக்கு மாற்றி இளஞ்சூடு அல்லது ஆறவைத்து பரிமாறவும்.

                  இந்த பண்டிகை காலத்தை இனிப்பாக மாற்றி கொள்ளவும்.

 


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை