Skip to main content

இமான் - சிவகார்த்திகேயன் விவகாரத்தில் பகீர் கிளப்பிய பிஸ்மி..!

Dec 23, 2023 28 views Posted By : YarlSri TV
Image

இமான் - சிவகார்த்திகேயன் விவகாரத்தில் பகீர் கிளப்பிய பிஸ்மி..! 

இசையமைப்பாளர் டி.இமான் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் தற்போது அதுதொடர்பான ஆதாரத்தை கண்ணில் பார்த்ததாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.



சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.



இப்படி பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. மது, புகை போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு இருந்த க்ளீன் பாய் இமேஜை டேமேஜ் செய்தார்.



வர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவருடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அந்த துரோகத்தை வெளியே சொல்லமாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்னவாக இருக்கும் என்று பலரும் தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக இமானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு சிவாதான் காரணம் என்ற பேச்சும் பலமாக அடிபட்டது.

 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை