Skip to main content

வட சென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

Dec 23, 2023 22 views Posted By : YarlSri TV
Image

வட சென்னை 2 அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!  

இயக்குநர் வெற்றிமாறன் உணர்வுப்பூர்வமான கதைகளால் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



இவரது வடசென்னை, விடுதலை உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.



இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு நெருக்கமாக அமைந்தவை. சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருபவை. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து படங்களை இயக்கிவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்தது. இந்தப் படத்தின் கதைக்களம் மற்றும் சூரி நாயகனாக நடித்தது, விஜய் சேதுபதியின் நடிப்பு என படத்தின் பிளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.



விடுதலை 2 படம்: இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப் படத்திலும் சூரி மற்றும் விஜய் சேதுபதி லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் அவருக்கான காட்சிகளை வெற்றிமாறன் அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.



இந்தப் படங்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக அவரது இயக்கத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது வடசென்னை 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய அதிர்வுகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார் வெற்றிமாறன். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் விரைவில் வட சென்னை 2 படம் வெளியாகும் என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

18 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

18 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை