Skip to main content

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!

Dec 22, 2023 31 views Posted By : YarlSri TV
Image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி! 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.



இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.



இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதின.



இதன் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.



தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி பார்ல் நகரில் நடைபெற்றது.



India's young brigade clinch the ODI series 2-1 after a throughly convincing victory in the final match 👊



📝 #SAvINDhttps://t.co/XDucAXYbE6 pic.twitter.com/4LKSUO2mSA



— ICC (@ICC) December 21, 2023



இதில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 296 ஓட்டங்கள் குவித்தது.



இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் 218 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.



இதன்மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.



இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தட்டிச் சென்றார்.



Arshdeep Singh's incredible bowling display earned him the Player of the Series Award in the #SAvIND ODI series 🌟 pic.twitter.com/aOgPYivqBk



— ICC (@ICC) December 22, 2023


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை