Skip to main content

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!

Dec 19, 2023 36 views Posted By : YarlSri TV
Image

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.! 

 சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.



மேலும், 220 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



சீனாவில் நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக பதிவு



சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 86 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



மேலும், 96 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.



சீனாவின் வடமேற்கு Gansu மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்த நிலநடுக்கம் அந்தநாட்டு நேரப்படி நேற்று இரவு 11.59 இற்கு ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்துடன், மீட்பு பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே, சீனாவில் முன்னதாக கடந்த ஒகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 23 பேறுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

16 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

16 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

16 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை