Skip to main content

3 பேரின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

Dec 15, 2023 23 views Posted By : YarlSri TV
Image

3 பேரின் வீடுகள் இடித்து தரைமட்டம்! 

மத்தியப் பிரதேச புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்ற மறுநாள், பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பா.ஜ.க அரசு புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு



மத்தியப் பிரதேச மாநில புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்ற மறுநாள், கட்சி  நிர்வாகியை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகளை பா.ஜ.க அரசு இடித்து அகற்றியது. புதிய அரசு அமைந்த பிறகு எடுக்கும் முதல் புல்டோசர் நடவடிக்கை இதுவாகும்.



முன்னதாக, மதக் கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி எழுப்பும்  ஒலிபெருக்கிகள்/டி.ஜேகளுக்கு யாதவ் விதித்தார். தொடர்ந்து இறைச்சி, மீன் போன்றவற்றை 



சட்டவிரோதமாக வாங்குதல் மற்றும் விற்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 10 இறைச்சிக் கடைகள் இடிக்கப்பட்டன.



காவல் துறையின் கூற்றுப்படி, தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஃபரூக் என்பவர் மற்றும் பா.ஜ.க ஜுக்கி ஜோப்ரி அமைப்பின் மண்டலப் பொதுச் செயலாளர் தேவேந்திர சிங் தாக்கூர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஃபரூக் தாக்கூரை  வாளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தாக்கூருக்கு கையில் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 



இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்கள் தாக்கூரை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



ஃபரூக், அஸ்லாம், ஷாருக், பிலால் மற்றும் சமீர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேரின் வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. வீடு கட்ட முறையான அனுமதி பெற வில்லை எனக் கூறி 



அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 



ஹபீப்கஞ்ச் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மணீஷ் ராஜ் சிங் படோரியா கூறுகையில், “விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகளை நாங்கள் இடித்தோம். தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஒருவரையொருவர் கிண்டல் செய்ததையடுத்து அவர்கள் வன்முறை மோதலில் ஈடுபட்டனர். 



ஃபரூக்கிற்கு குற்றப் பின்னணி உள்ளது. மேலும் அவர் மீது NSA (தேசிய பாதுகாப்புச் சட்டம்) கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று ஹபீப்கஞ்ச் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மணீஷ் ராஜ் சிங் படோரியா கூறினார்.   



இதற்கிடையில், இறைச்சிக் கடைகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்துப் பேசிய உஜ்ஜைன் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூடுதல் ஆணையர் ராதே ஷ்யாம் மாண்ட்லோய், அரசின் அனுமதியின்றி இறைச்சி மற்றும் மீன் விற்க முடியாது. நாக்ஜார் பகுதியில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த 10 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



இதில் தெருக்களுக்கு அருகில் இருந்த சில கடைகள் சேதமடைந்தன… மற்ற துறைகளிலும் அதிகாரிகள் இதில் பணி செய்கின்றன” என்றார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை