Skip to main content

அனுபவத்தில் தானே அறிவு பிறக்கின்றது!

Dec 09, 2023 30 views Posted By : YarlSri TV
Image

அனுபவத்தில் தானே அறிவு பிறக்கின்றது! 

நடிகை நயன்தாரா வெற்றிப் பட இயக்குநர்களின் காம்பினேஷனில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.



நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய், சத்தியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் கடந்த முதலாம் திகதி திகதி அன்னபூரணி திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகின்றது.



இந்தப் படம் நயன்தாராவின் 75வது படம் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ளது.



திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகி, செஃப் ஆவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.



ஆயினும் படத்திற்கு சரியான பிரமோஷன்கள் செய்யப்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.



படத்தில் அன்னபூரணியாக நடித்துள்ளார் நயன்தாரா. மேலும் நடிகர் ஜெய் ஃபர்ஹானாவாகவும் சத்யராஜ் செஃப் ஆனந்தாகவும் நடித்துள்ளார்.



மேலும் படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சச்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, பூர்ணிமா ரவி, முகமது இர்ஃபான், திடியன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வெளியாகி முதல் சில தினங்களிலேயே கோடிகளில் வசூல் செய்துள்ளது.



இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து நீண்ட காலங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளனர்.



சினிமாதான் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துள்ளதாக அந்த பேட்டியில் நயன்தாரா நெகிழ்சசியை வெளிப்படுத்தியுள்ளார்.



தனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை ஆகியவற்றை சினிமாதான் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படங்களில் தனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

15 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

15 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

15 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

15 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

15 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை