Skip to main content

தரையில் படுத்து தூங்குவதில் இவ்வளவு நன்மைகளா?

Dec 09, 2023 20 views Posted By : YarlSri TV
Image

தரையில் படுத்து தூங்குவதில் இவ்வளவு நன்மைகளா?  

தரையில் படுத்து தூங்குவதில் சில நன்மைகளும் உண்டு. வாங்க பார்க்கலாம்.



பொதுவாக தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள், எலும்பு முறிவு, எலும்பில் காயம் உள்ளவர்கள் தரையில் படுக்கக்கூடாதென்பது  பொதுவான விடயம். பருவமழை மற்றும் குளிர்காலங்களில் தரையில் தூங்குவதை தவிர்ப்பது நல்லது. தரையில் ஈரமாக இருந்தால், தரையில் தூங்குபவர்களுக்கு நோய் ஆபத்து அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் தரையின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் சளி, காய்ச்சல் எளிதில் ஏற்படும்.



ஒரு அழுக்கு தரையில் தூங்குவது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. சிலருக்கு தோல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் தரையில் படுத்தால் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.



தரையில் தூங்குவதற்கு சரியான படுக்கை விரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சிலருக்கு தரையில் படுத்து உறங்குவது மிகவும் சௌகரியமாக இருக்கும். கழுத்து வலி உள்ளவர்கள் தரையில் படுக்கை விரிப்பை விரித்து பெரிய தலையணையை வைக்காமல் போர்வையை  மடித்து தலைக்கு வைத்து படுத்தால் கழுத்து வலி குறையும்.



சிலருக்கு முதுகு வளைந்து இயல்பான அமைப்பில் இல்லாமல் இருக்கும். அவர்கள் தரையில் படுக்கை விரித்து கிடைமட்டமாக படுத்து பழகுவது உடலை நேர்த்தியாக்கும். தேவைக்கு ஏற்ப தரையில் போர்வையை விரித்து படுப்பது நல்ல பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது .


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை